education

img

தில்லி காவல் துறையில் கான்ஸ்டபிள் பணி

தில்லி காவல் துறையில் காலியாக உள்ள பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Head Constable (AWO/TPPO)

சம்பள விகிதம்: ரூ.25,500 முதல் ரூ.81,100

வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் அடங்கிய பிளஸ் 2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Mechanic-cum-Operator Electronic communication System தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து NTC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்யூட்டரில் பணிபுரியும் திறன் மற்றும் கம்யூட்டரில் 15 நிமிடத்தில் 1000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:ஆண்கள் 165 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 78 முதல் 82 செ.மீ. இருக்க வேண்டும். பெண்கள் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:கொள்குறி வகை கேள்விகளை கொண்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகதியானவர்கள் பணிக்கு தெர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வுக்கான பாடதிட்டம், மதிப்பெண் விபரம் கீழ்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. SC/ST முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.delhipolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.1.2020

குறிப்பு:
1. விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.
2. 10-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ் விண்ணப்பதாரரின் வயதுவரம்பு சான்றாக கருதப்படும்.
3. எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தட்டச்சு தேர்வு நடைபெறும். 

;